காதலர் தினமா? கலாசார சீரழிவா?

பாரத நாட்டிற்கு இது அவசியமா?

அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம் காதலித்தது இல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த உண்மை புரியாத அந்நிய சக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.

இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே போலி கலாசார போர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதை கற்ப்பிக்க வேண்டியது இல்லை.

ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள பட்டிருக்கிறது. இந்த இழி செயலை ஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள் வேறு.

தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?

நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும். திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம் கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை இடுவதற்கு சமம்.

அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
~ இசை இரைச்சலாகி விட்டது
~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
~ காதல் காமமாகி விட்டது
~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது

புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !

இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை விடுத்து முன் பின் தெரியாத ஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம் பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டு அனுமதிப்பீர்களா?

உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
அவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோராகிய உங்கள் கடமை.

ஜெய்ஹிந்த்

1 கருத்துக்கள்:

என் பக்கம் June 17, 2009 at 2:04 PM

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html